Friday, September 16, 2011

பெண் அறிவியலார்01

      உலகில் உள்ள அறிவியல் ஆராய்ச்சிப் பணியாளர்களில், பெண்கள் 25 விழுக்காடு மட்டுமே. நோபல் பரிசு பெற்றவர்களில் 2.5 விழுக்காட்டினர் மட்டுமே பெண்களாக இருக்கின்றனர். மேலதிக மகளிர் அறிவியல் லட்சியத்தில் ஈடுபடுவதை ஊக்குவித்து, பெண் அறிவியலாளர்களின் முக்கிய பங்கினைப் பாராட்டும் பொருட்டு, 2010ஆம் ஆண்டின் துவக்கத்தில், 6வது சீன இளம் பெண் அறிவியலாளர்கள் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டு, Diao Yu Tai விருந்தினர் மாளிகையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீனாவின் 5 அறிவியலாளர்கள் இவ்விருதைப் பெற்றனர்.




     குவாண்ட்டம் ஒளியியல் அறிவியலாளரும், தியென் ஜின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Li Xiao Ying அம்மையார் அவர்களில் ஒருவர் ஆவார்.



     அறிவியல் துறையில் முக்கிய, புத்தாக்கத் தன்மை வாய்ந்த அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளைப் பெற்ற இளம் பெண் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்களைப் புகழ்ந்து போற்றுவதற்கு, இவ்விருது நிறுவப்பட்டது. விதியின் படி, விருது பெற்றவரின் வயது, 45ஐத் தாண்டக்கூடாது.




       விருது பெற்ற மற்றவரைப் போலல்லாமல், Li Xiao Ying அம்மையார் அலுவலகப் பணியாளராக 7 ஆண்டுகள் வேலை செய்திருந்தார். இன்னொரு 7 ஆண்டுகளில், அவர் ஓர் அறிவியலாளராக மாறினார். பல்கலைக்கழகத்துக்குத் திரும்பியது, தனது வாழ்வு வேறு பாதையில் முன்னேறுவதற்கு ஒரு முக்கிய தெரிவாகும் என்று Li Xiao Ying அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது:
      




        "1995, 1996ஆம் ஆண்டுகளில், நான் வேலை செய்த அலுவலகத்தில் வேலைகள் குறைவு. இவ்வேலைகள் என் ஆர்வத்தைத் தூண்ட வில்லை. முதுகலைப் பட்டம் பெற தொடர்ந்து கல்வி பயின்று, எனது அறிவை விரிவாக்க வேண்டும் என்று விரும்பினேன்" என்றார் அவர்.
ஒருவரின் வாழ்வில் தெரிவுகள் அதிகம். 


       பல்கலைக்கழக வளாகத்துக்குத் திரும்பிய அந்த நாள் முதல், Li Xiao Ying அம்மையார் வேறு வாழ்க்கைப் பாதையில் முன்னேறத் துவங்கினார். 1985ஆம் ஆண்டு மற்றும் 1998ஆம் ஆண்டு, தியென் ஜின் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டத்தையும் முதுகலைப் பட்டத்தையும் Li Xiao Ying அம்மையார் முறையே பெற்றார்.


        2001ம் ஆண்டு Shan Xi பல்கலைக்கழக ஒளியியல் மற்றும் மின்னியல் ஆய்வகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை, அவர் அமெரிக்காவின் வட மேற்கு பல்கலைக்கழகத்தின் மின்னணுத் துறையில் முனைவர் பட்டத்துக்கு பிறகான ஆய்வுக் கல்வியை தொடர்ந்து பயின்றார். 


        அறிவியல் மீதான நாடுதல் மற்றும் ஆராய்ச்சி, அவருக்கு பெரும் மகிழ்ச்சி தந்தது. அறிவியல் லட்சியம் மீதான அவரது ஆசிரியர்களின் ஆசை, அவருக்கு உந்து ஆற்றலை ஊட்டியது. அவர் கூறியதாவது:
  




     "முனைவர் பட்டத்தைப் பெற பயின்ற போது, பேராசிரியர் Peng Kun Chi மற்றும் பேராசிரியர் Xie Chang De, என் ஆசிரியர்களாக இருந்தனர். இயற்பியல் என்ற இப்புதிய துறைப் படிப்பைத் தெரிவு செய்ததால், கவலைப்பட்டேன். ஆனால் என் ஆசிரியர்கள் எனக்கு எப்போதும் ஊக்கமளித்தனர். இது மட்டுமல்ல, அப்போது 60 வயதான என் ஆசிரியர், நாள்தோறும் காலை எட்டு மணியளவில், ஆராய்ச்சிக் கூடத்துக்கு வந்தார். இரவு பத்து பணி வரை அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரை போல் அதிக முயற்சிகளை மேற்கொண்டால், சாதனை பெறுவது உறுதி என்று கருதுகின்றேன்" என்றார் Li Xiao Ying.




         2005ம் ஆண்டு நாடு திரும்பிய பின், Li Xiao Ying அம்மையார் தியென் ஜின் பல்கலைக்கழகத்தில் பணி புரியத் துவங்கினார். இப்பல்கலைக்கழகத்தில் குவாண்ட்டம் ஒளியியல் ஆராய்ச்சி குழுவை அவர் உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கினார். 


       ஒளி வழிகாட்டியைப் பயன்படுத்தி, குவாண்ட்டம் தகவல்களைக் கையாளும் ஆய்வு மேடையை அவர் சொந்தமாக வடிவமைத்து, உருவாக்கினார். ஒளியின் தன்மையை மேலும் ஆழமாக புரிந்து கொள்ள இந்த ஆய்வு துணை புரியும்.
     
        இது மட்டுமல்ல, practical குவாண்ட்டம் சாதனங்களை ஆராய்ந்து தயாரிப்பது, அளவீட்டின் செம்மை மற்றும் செயல்பாட்டு வேகத்தை உயர்த்துவது, தகவல் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது உள்ளிட்ட துறைகளில் இந்த ஆய்வு முக்கியமானது. 

No comments:

Post a Comment