Friday, September 16, 2011

அறிவு02

காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம்.

இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்வோம்.

பொருள் வெளி நிலைமாற்றம் தான் இயக்கம்
இயக்கத்தின் ஒப்பீடுகள் தான் அறிவு.
அறிவின் அளவீடுகள் தான் காலம்.

உதாரணமாக: பொருள் வெளியாவது இயக்கம். பொருள் வெளியாகி மீண்டும் பொருளாகும் போது பிந்தைய பொருளுக்கும் முந்தைய பொருளுடனான அறியும் திறன்(ஆற்றல்) அறிவு. அறிவின் நிலை அளவீடுகள் காலமாகிறது. அதாவது பிந்தைய பொருளுக்கு முந்தைய பொருள் இறந்ததகாலம்., எதிர்வரும் பொருள் எதிர்காலம்.

இயக்கம், அறிவு, காலம் இவற்றிற்கான வேறுபாடுகளை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்

உதாரணமாக 1, 2, 3, 5, 8, 13, 21 இந்த முறைபடிதான் காலஅறிவு அமைகிறது. இதில் இயக்கம் என்பது 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, .... இப்படி சீராக வருவது. ஆனால் அறிவு என்பது 1, 2, 3, 5, 8, 13... என அமையும். அறிவின் சுற்றுகள் படி தான் காலமும் அமையும். இதில் 1, 2, 3, 5, 8 இதெல்லாம் அறிவு. இதில் காலம் அறியப்படும். இடைபட்ட 4, 6, 7, இதெல்லாம் மாயைகள் இது அறிவுக்கு உட்படாது. ஆனால் இயக்கத்துக்கு உட்படும். இயக்கம் எல்லாம் காலமாகாது. ஆனால் அறிவும் காலமும் இயக்கத்துக்கு உட்பட்டது.

இயக்கம் என்பது படிப்படியாக சீராக தான் நிகழும். ஆனால் காலம் என்பது அப்படியல்ல. காலம் அறிவை பொருத்தே அமையும். இதை ஜன்ஸ்டீன் உதாரணத்திலேயே விளக்குகிறேன். காதலிக்காக காத்திருக்கும் நேரத்திலும், காதலி வந்த பின் கடக்கும் நேரத்தின் போதும் நம் கையில் உள்ள கடிகார முள் ஒருபோல சீராக தான் இயங்குகிறது. ஆனால் கா காதலியின் வருகைக்கு முன்னும் பின்னும் காலத்தின்நகர்ச்சியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

அதாவது 1, 2 ,3 ,4, 5, 6, 7, 8, .... இப்படி தான் இயக்கம் சீராக நிகழ்கிறது. ஆனால் காலமோ அறிவுக்கு ஏற்ப 1, 2, 3, 5, 8 ... இப்படி வருகிறது.

காலஅறிவு என்பது அறிவின் இறந்த -  நிகழ் - எதிர் காலங்களின் கட்டமைப்பு. அதை இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உடல் ஒத்துழைப்பை பொருத்து இயல்பாகவும் அறிவியல்ரீதியிலும் திருப்ப முடியும்.

உதாரணமாக மனிதனின் நினைவறிவை மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் முறைகளின்படி இறந்தகாலத்துக்கு அழைத்து செல்லலாம்.

காலசக்கரம் என்பது ஒட்டுமொத்த காலஅறிவையும் அதாவது பிரபஞ்சத்தையே இறந்தகாலத்துக்கு திருப்புவது. உதாரணமாக மெஸ்மெரிசம் மூலம் மனிதனின் நினைவறிவை மட்டுமே இறந்த காலத்துக்கு திருப்ப முடியும். ஆனால் மனிதனையே திருப்ப முடியாது. அதாவது குழந்தை நினைவுகளை திருப்பும் அதேவேளையில் உடலையும் காலசூழலையம் இறந்த காலத்துக்கு திருப்ப முடியாது.

காலசூழலையே இறந்த காலத்துக்கு திருப்புவது தான் காலச்சக்கரத்தை திருப்புவது. அதாவது மனிதன் மனதோடு உடலையும் காலசூழலையும் குழந்தையாக திருப்புவது. இங்கு காலசூழலை திருப்புவது என்றால் அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது அவனோடு இருந்த காலசூழலையும் திருப்புவது.

உதாரணமாக நீஙகள் 7 வயதுக்கு காலசக்கரத்தை திருப்புவதாக வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் மட்டும் குழந்தையாக மாட்டீர்கள் உங்களோடு உங்கள் அம்மா அப்பா, தம்பி தங்கை, கூடபடித்த நண்பர்கள், ஆசிரியர், நாய்குட்டி, மரம், செடி கொடி, ஆறறுநீர் இப்படி அனைத்து சூழலுமே உங்களின் அதே குழந்தை பருவத்திற்கு திருப்பும். சுருக்கமாக உங்களோடு நேரடியாக மறைமுகமாக தொடர்பு உலகத்தையே( பிரபஞ்சத்தையே) உங்கள் குழந்தை பருவத்திற்கு திருப்புவது தான் காலசக்கரத்தை பின்னோக்கி திருப்புவது. இப்படி குழந்தை பருவத்தை மட்டுமல்ல முந்தைய பிறவிகள் என எவ்வளவு பின்னோக்கி வேண்டுமானாலும் திருப்பலாம்.

காலசக்கரத்தை திருப்ப முதலில் அதற்கு ஏற்ப நமது உடல்அறிவை தயார்படுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு நிகழ்காலத்தில் இருக்கும் அறிவு இறந்த காலத்தின் எதிர்காலம். இதை மீண்டும் இறந்தகாலத்துக்கு திருப்பும் போது அது இந்த நிகழ்காலத்தின் எதிர்காலமாக தான் வரும். இப்போது நமது நிகழ்காலாம் முந்தைய நிகழ்காலத்தின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்ற இருஅறிவுக்கு உட்படும். இப்போது நமது அறிவை மீண்டும் எதிர்காலத்துக்கு திருப்பினால் முந்தைய நிகழ்காலமே வரும். இதில் காலஅறிவு நமக்கு காலசக்கரமாக இருந்தால் மட்டுமே அறிவாக இருக்கும் இல்லையென்றால் அது மாயையாக தான் இருக்கும்.

இதை புராண கதைகளில் உதாரணப்படுத்தலாம்: மாயை என்றால் என்ன என்று கேட்ட ஒரு பக்தனிடம் தனக்கு தாகமாக இருக்கிறது ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீர் எடுத்துவர அனுப்புகிறார் இறைவன். தண்ணீர் எடுக்க சென்ற பக்தன் ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் மீது காதல்வசப்படுகிறான். அவள் பின்னால் செல்லும், பக்தன் அவளை திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறான். குழந்தைகள், பேரக்குழந்தைகள் பிறக்கிறது. பக்தனுக்கு வயதாகி காலங்களும் ஓடுகிறது. பக்தன் வெளியூர் சென்ற ஒரு நாள் திடீர் என ஊரெங்கும் வெள்ளபெருக்கு வந்து மக்கள் அனைவரும் நீரில் முழ்குகின்றனர். இதில் பக்தனின் மனைவி குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்படுகின்றனர். ஊருக்கு திரும்பிய பக்தன் தன் மனைவி குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகமாக ஆற்றங்கரை பக்கம் நடந்து செல்கிறான். அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த இறைவன் பக்தா நான் தாகத்துக்கு தண்ணீர்கேட்டேனே நீ கொண்டுவரவில்லையா என கேட்கிறார். அதிர்ச்சியடைந்த பக்தன் இறைவா உன் மாயையின் திருவிளையாடல் இப்போது புரிகிறது என காலில் விழுந்து வணங்குகிறான்.

இந்த கதை வெறும் உதாரணம் மட்டுமே. இதில உண்மை என்னவென்றால் காலஅறிவை பின்னோக்கி சுற்றும் போது நமக்கு காலசக்கரம் சாத்தியப்பட வேண்டும். இல்லையென்றால் எல்லாம் கனவாக அதாவது மாயையாக தான் இருக்கும். காலசக்கரம் என்பது மெய்ஞானம் அதாவது மாயையையும் ஜீரணித்துக்கொள்ளதக்க அறிவு. இன்னும் ஆழமாக சொன்னால் அறிவு மாயை இரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் மெய்யறிவு நமக்கு வேண்டும். இதை தான் ஆன்மீக ஞானிகள் ஞானமாக இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு மேற்சொன்ன விளக்கங்கள் அனைத்தும் நிச்சயம் குழப்பமாக தான் இருக்கும். இதற்கு நமது அறிவின் பொருளறிவு புரிதல் தான் காரணம். இந்த பிரபஞ்ச கட்டமைப்பை சரியாக புரிந்துகொள்ளும் போது நமக்கு காலசக்கரம் விசயம் எளிதான ஒன்றாகிவிடும். அதை பயிற்சி மூலம் நிரூபணப்படுத்தவும் செய்யலாம்.

இந்த பிரபஞ்சம் என்பது என்ன? பொருளாக இருப்பது என்ன? அடிப்படை இயக்கத்துக்கு காரணம் என்ன இந்த விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும்.

No comments:

Post a Comment