Monday, September 19, 2011

கார்-ஆ பேருந்தா-Prof.N.Mani

அன்பு நண்பர்களே,வணக்கம்.
                     பேரா.நா.மணி அவர்களின் வெளியீடான ''கார்-ஆ பேருந்தா'' புத்தகத்தில் இருந்து சமூக நலனுக்கான சில கருத்துக்கள் இங்கு காண்போம்.
       இது கார்களின் காலம்.1990களில் தொடங்கி இன்று வரை தாராளமயமாக்கல் அதாவது உலகமயமாக்கல் கொள்கையால் சுற்றுச்சூழல் கேடுகள் அதிகரித்துள்ளன.கட்டுக்கடங்காத வாகனங்கள்,புகைமண்டலங்கள்,இரைச்சல்கள் என இந்திய நகரங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.மக்கள் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
         மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப போக்குவரத்துவளர்ச்சி அடைய வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் சென்னை பெருநகரத்தில் மட்டும் மக்கள்தொகைப் பெருக்கம் 10 சதம்தான்.ஆனால் தனியார் வாகனப் பெருக்கம் 108சதம்.தனியார் வாகனங்களின் துரிதப்பெருக்கம்  .பொதுப்போக்குவரத்து திட்டமிட்டு நசுக்கப்பட்டதே இதற்குக்காரணம் ஆகும்.மக்கள் தொகை மேலும்,மேலும் வளர பேருந்து வசதிகள் குறைக்கப்பட்டதால் மக்கள் இரு சக்கர வாகனங்களையும்,கார்களையும் நோக்கித் தள்ளப்பட்டனர்.இதனால் கட்டுக்கடங்காத வாகனப்பெருக்கம் தவிர்க்க முடியாததாகி விட்டது.அதாவது தனியார் துறையின் நலனுக்காகவும், கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களின் இலாபத்திற்காகவும் இந்திய பொதுப்போக்குவரத்து கொஞ்சம்,கொஞ்சமாக அழிக்கப்பட்டுவருகிறது.தனியார் வாகனத் தொழில் செழித்து வளரத் திட்டமிடப்பட்டுவருகிறது.உதாரணமாக பெருநகரங்களில் வாகன நெரிசலைத் தவிர்க்க கோடி,கோடியாக செலவழித்து மேம்பாலங்கள் கட்டப்பட்டுவருகின்றன.மேலும்,மேலும் தனியார் வாகனப் பெருக்கத்தால் மேம்பாலங்களுக்குள்ளும் அடங்காத போக்குவரத்து நெரிசல் வரத்தான் போகிறது.எனவே வருங்காலத்தில் மேம்பாலத்திற்கு மேல் மேம்பாலம் கட்ட முடியுமா? சுருங்கக்கூறுவதனால் பொதுப்போக்குவரத்து வாகனங்களை அதிகரித்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களைக்குறைத்து வாகனப்போக்குவரத்து நெரிசலையும்,சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க வேண்டும்.இல்லாவிடில் வாகனங்களும்,மேம்பாலங்களும் பெருகி நகரங்களில் விழிபிதுங்கி நிற்க வேண்டிவரும்.! ஒரு துயரச்செய்தி=இந்தியாவில் மோட்டார்வாகன விற்பனையின் அசுர வளர்ச்சி பொருளாதாரத்திற்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பொது ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கிறது.அதோடு சாலைகளை பாதசாரிகளுக்கும்,சைக்கிள்களுக்கும்,பேருந்துகளுக்கும் மீட்டுத்தரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.நுகர்வுக்கலாச்சாரத்தால் கட்டுண்டு கிடக்கும் இந்திய நடுத்தர வர்க்கத்தினர் மேலும,மேலும் கடன்பட்டு கார் கலாச்சாரத்திற்கும் அடிமையாகி வருகின்றனர்.அதுமட்டுமல்ல வளிமண்டலத்தை மாசுபடுத்தும் டீசல்கார்களின் பெருக்கத்தைத் தடை செய்ய வேண்டும்.அல்லது மட்டுப்படுத்த வேண்டும்.
   தனியார் கார் பெருக்கத்தால் ஏற்படும் பல பாதக விளைவுகள்=(1) கார் அளவிற்கே ஏற்றிச்செல்லும் ஆட்டோரிக்ஷாக்களைவிட 8மடங்கு மாசுபாட்டை கார்கள் உருவாக்குகின்றன. (2)பயணிகள் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் ,பேருந்துகளைவிட குறைந்தபட்சம் இரண்டு மடங்கும்,இரயில்களைவிட 10 மடங்கும் கார்களால் மாசுபாடு உண்டாகிறது.(3)கார் ஒரு பயணியை எடுத்துச்செல்ல பேருந்துகளைவிட14 மடங்கும்,இரயில்களைவிட 60மடங்கும் அதிகமாக எரிபொருளைக்குடிக்கிறது.(4)கார்களால் நடக்கும் விபத்துக்கள் பேருந்துகளில் நடக்கும் விபத்துக்களை விட8மடங்கு அதிகம்.இரயிலில் அடிபட்டு இறப்போரைவிட கார்களில் அடிபட்டு இறப்போர்100 மடங்கு அதிகம்.கார்கள் ஓடும்போது மட்டும்தான் காற்று மாசுபடுவதும், சாலைவிபத்து நடப்பதும் என்று கருத வேண்டியதில்லை.
  PARAMESDRIVER.BLOGSPOT.COM // SATHY & THALAVADI

No comments:

Post a Comment