Friday, December 30, 2011

சாலை விபத்து அதிகரிக்க காரணங்கள்

அன்பு நண்பர்களே,வணக்கம். 

சாலைவிபத்துகளுக்கு காரணம் என இந்தப்பதிவில் சிறிதளவே பதியப்பட்டுள்ளது.தாங்களே நினைத்துப்பாருங்கள்.சாலைவிபத்தினைத் தவிர்க்க தங்களால் ஆன முயற்சியினைச் செய்யுங்கள்.

சாலை விபத்து அதிகரிக்க  காரணங்கள் 



இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர்  சாலை விபத்துக்களில் பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில் வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு  என்ன என்பது குறித்த ஓர் அலசல்.


1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .

2 .வேகம்
பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .


3 .ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள்
நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

நிவாரணம் :ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் வாகனம் ஓட்ட உரிமம் எடுத்துக்கொடுப்பதைத்தவிர்த்து, வாகனம் ஓட்டக்கற்றுக்கொடுக்க வேண்டும்.இதனை போக்குவரத்து ஆய்வாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

4 . தூக்கம்

அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.

நிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .


5 .குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

நிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் தொழில் சாரா ஓட்டுனர்கள்(முதலாளிகள்,அதிகாரிகள்,ஓட்டுனர் தொழில் அல்லாத பிற தொழில் சார்ந்த ஆனால் சொந்தவாகன ஓட்டுனர்கள்) குடிபோதையில் வாகனம் ஓட்டிய விஷயம்  சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .


6 . தரமற்ற வாகனங்கள்  
காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .
 
நிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து
செய்யவேண்டும். 

7 .
பழுதடைந்த சாலைகள்  
குண்டும்
  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .  
நிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .
8 .பொதுமக்கள் அலட்சியம்   

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது,அலட்சியம்,அறியாமை,கவனமின்மை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .
 
நிவாரணம் :பொதுமக்கள் விழிப்புணர்வு,அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பேருந்துகளில் ஏறுவதைத்தவிர்க்க வேண்டும்.

9 .சாலைகள் வடிவமைப்பு  
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறைபாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .
 
நிவாரணம் :தேர்ந்தவர்களைக்கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும்.
10 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .
 
நிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும்.இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகநலன் கருத்தில்கொண்டு இணைந்து செயல்படவேண்டும்.

No comments:

Post a Comment