Friday, January 20, 2012

தென்னிந்திய அறிவியல் பயிற்சி முகாம் புதுவையில்- ஜனவரி 2012

          

                               அன்பு நண்பர்களே,
              PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவு காண வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறேன்.
         கடந்த 17-ந்தேதி 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி-அதாவது ஜனவரி2012-ல் புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புது டெல்லி-விஞ்ஞான் பிரச்சார் சார்பாக நடத்தப்பட்ட  புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சிப் பயிலரங்கத்தின் கண்ணோட்டம் பற்றி சிறிது இங்கு காண்போம்.

            அறிவியல் பயிற்சிப்பட்டறையின்  விழாப் பெயர்ப் பலகையின் தோற்றம் இது மேலே உள்ள படம்.


              புதுவை அறிவியல் இயக்கம், புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்புடன் இணைந்து நடத்திய புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சி பயிலரங்கு நடைபெற்ற பள்ளியின் முகப்பு அறைத்தோற்றம் மேலே உள்ள படம்.(கர்நாடக மாநில நண்பர்(KSF),தமிழ்நாடு மாநில நண்பர்(TNSF),புதுவை மாநில நண்பர்(PSF) ஆகியோர் ஆர்வமுடன் பங்கேற்ற காட்சியுடன்.)      
 

     
            புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி திருமிகு.T.V.வெங்கடேஷ்வரன் அவர்கள் அறிவியல் செய்முறைப் பயிலரங்கத்தினைத் துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி மேலே உள்ள படம்.அருகில் திருமிகு.ஸ்ரீதரன் அவர்கள்,திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்கள்,திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள்,திருமிகு.S.சீனிவாசன் அவர்கள்.

       
               புதுவை அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள் பயிலரங்கத் துவக்கத்தின்போது இந்தப் பயிற்சிப்பட்டறையின் அவசியத்தை எடுத்துரைத்த காட்சி மேலே உள்ள படம்.



             எளிதில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக்கொண்டு செய்யும் அறிவியல் பயிற்சியின் எளிமை மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்குகிறார் பிரான்ஸ் நாட்டின் ஒடிசா பாரீஸ் சௌத்-11 பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமிகு.பியர் பான்த்ஸ் (ஓய்வு) அவர்கள் மேலே உள்ள படம்.



     

             புதுவை அறிவியல் இயக்கத் துணைத்தலைவர்களில் ஒருவரான திருமிகு.A.ஹேமாவதி அவர்களது உரையில்  பயிற்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள தென்னிந்திய வட்டார அறிவியல் ஆர்வலர்கள் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பினை அனைத்து எளிய மக்களுக்கும்,மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்ட  காட்சி மேலே உள்ள படம்.


திருமிகு.பேரா.பியர் பான்த்ஸ் அவர்கள்  அறிவியல் செய்முறை விளக்கம் கொடுத்த காட்சி மேலே உள்ள படம்.



திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்களதுஅறிவியல் விளக்கத்திற்கான  பிரெஞ்ச் மொழியின்  உரையினை, புதுவையில் உள்ள பிரெஞ்ச் பள்ளி இயற்பியல் ஆசிரியர் அவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அறிவியல் இயக்க நண்பர்களுக்காக மொழி பெயர்த்து விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

            ஆந்திரா மாநில அறிவியல் இயக்க ஆசிரியப்பெருமக்கள் அறிவியல் விளக்கத்தினை ஏற்கும் காட்சி மேலே உள்ள படம்.


       கர்நாடகா மாநில அறிவியல் இயக்க அமைப்பாளர் அவர்கள் அறிவியல் செய்முறை விளக்கத்தினை சோதித்து தெளிவு பெறும் காட்சி.அதனை நோக்குபவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையத்தினைச் சேர்ந்த ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.

           கேரளா மாநில அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர்கள் அறிவியல் செய்முறைகளைப் பரிசோதிக்கும் காட்சி மேலே உள்ள படம்.



      தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட அறிவியல் இயக்க நண்பர் பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் ஈரோடு மாவட்ட தாளவாடி மையம்-பள்ளி ஆசிரியர் அறிவியல் பரிசோதனை செய்து பார்க்கும் காட்சி மேலே உள்ள படம்.



அறிவியல் பரிசோதனை எல்லாம் கடைகளில் கிடைக்கும் சோப்பு ஆயில் மற்றும் தண்ணீரிலும் செய்யலாங்க! என்கின்றனர்,கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் மேலே உள்ள படம்.


  ஆந்திர மாநில அறிவியல் இயக்க ஆசிரியர் சந்தேகத்திற்கான விளக்கம் பெற அந்த விளக்கம் தனக்கும் தேவை என்ற நோக்கில் அருகில் ஆர்வமுடன் கேட்டறிகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.



           கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் தங்கிஇருந்த விடுதிக்கு வந்து உடன் ஊக்கமும் உற்சாகமும் அளித்த ஆசிரியர் திருமிகு.விசாகன்-புதுச்சேரி, அவர்கள் மேலே உள்ள படம்.
       
The Alliance Francaise Of  Pondicherry வழங்கிய பொங்கல் திருவிழா 18-ந்தேதி இரவு 7-00மணிக்கு கடற்கரை அருகில் உள்ள  Maison Colombani -இல் நடந்த Clowns Sans Frontieres circus என்னும்  கலை நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்துகொண்டு இன்புற்ற காட்சி மேலே உள்ள படம். (இந்நிகழ்ச்சியினைக் கண்டுகளிக்க உதவிய புதுச்சேரி ஆசிரியர் திருமிகு. விசாகன் அவர்களுக்கு நன்றி!)
           கீழே உள்ள படத்தின் வலது கடைசியில் உள்ளவர் திருமிகு.விசாகன் புதுச்சேரி ஆசிரியர் அவர்கள் அவர்தம் வாரிசுடன்.!!!


   
                அன்பு நண்பர்களே,வணக்கம்.


              புதுவை அறிவியல் இயக்கம் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார அமைப்பு என்னும் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து கடந்த 17,18 & 19 ஜனவரி-2012 ஆகிய மூன்று நாட்கள்

          புதுச்சேரி, கண்ணன் நகரில் அமைந்துள்ள கோவிந்தபிள்ளை வீதியில் செயல்படும்- வெற்றி வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் மேல்தளத்தில் அமைந்துள்ள
     
          வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில்-

           நூதன எளிய அறிவியல் செய்முறைப் பயிலரங்கு  நடத்தியது.இங்கு மூன்று நாட்களும் சுமார் 15+22+31 என 68-க்கும் அதிகமான அறிவியல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. சிறு கிராமத்தில் எளிமையாகக்கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் பயன்படுத்தும் விலை மலிவான பொருட்களைக்கொண்டு நிகழும் அறிவியல் விளைவுகளைச் செய்து காட்டிப் பயிற்சி அளிக்கப்பட்டன.
              இந்தப்பயிற்சியில் நியூட்டன் விதி,பாஸ்கல் விதி,கலிலியோ விதி, வேதிவினை மாற்றம் மற்றும் இயற்கையின் மாற்றம்&தோற்றம் எனப் பலவிதப் பயன்பாடுகள் அடங்கிய செய்முறைகள் எளிமையாக,தெளிவாக,ஆர்வமூட்டும் வகையில் எடுத்தாளப்பட்டன.

          ஆந்திரா,கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியப்பெருமக்களும்,அறிவியல் ஆர்வலர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த அறிவியல் ஆக்கங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவக் கண்மணிகள் உட்பட சாதாரணப் பொதுமக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்லப்படும். என அந்தப்பயனாளர்கள் தெரிவித்தனர்.
                அடுத்து வரும்  21, 22 & 23 தேதிகளில் போபால் அறிவியல் இயக்கத்துடன் இணைந்து  போபாலிலும்,அடுத்ததாக ஹிமாசலப்பிரதேச மாநிலம் -மாண்டியிலும் இந்த நூதன எளிய அறிவியல் பயிற்சி அளிக்கப்போவதாக இந்த அறிவியல் பயிற்சி அமைப்பினர் தெரிவித்தனர்.
                          
               இதன் நோக்கம் நமக்கு முன்னே இருக்கும் அறிவியல் நிகழ்வுகளை கண்டறியவைப்பதும்,அதனால் கிராமப்பகுதியினைச் சேர்ந்த ஏழை மாணவர்களும் தங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் கிடைக்கும் எளிய பொருட்களைக்கொண்டு அறிவியல் நிகழ்வுகளைச் செய்யவைத்து அதன்விளைவாக அறிவியலில் ஆர்வத்தினைத் தூண்டச் செய்வதும்   ஆகும் எனவும் தெரிவித்தனர்.  தென்னிந்திய அளவிலான அறிவியல் பயிற்சி பயிலரங்கத்தினை நடத்திய புதுச்சேரி அறிவியல் இயக்கத்தினர் கலந்துகொண்ட அனைவருக்கும் மூன்று நாட்களும்  உண்ண உணவு    தங்குவதற்கு  ஏற்ற  உறைவிடம் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்துள்ள விதம் மிகவும் பாராட்டுக்குரியது.இரவு பகல் பாராமல் தேவைக்கேற்ப உதவிகள் செய்த  புதுச்சேரி அறிவியல் இயக்க அனைத்து அறிவியல்ஆர்வலர்கள் & ஆசிரியர்களுக்கு  எங்களது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மிக்க நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். என,,,,,,,,,,

                                              பதிவேற்றம்;- PARAMESDRIVER
                                   TAMILNADU SCIENCE FORUM- THALAVADY
                                                         ERODE DISTRICT-
                                       DATE:-20-JANUARY - 2012 FRI DAY.

No comments:

Post a Comment