Tuesday, February 7, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02



அன்பு நண்பர்களே,
          PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் தலைவணங்கி வரவேற்கிறேன். அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம் சத்தியமங்கலம் சார்பாக நடைபெறும் கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிமுகாம் பற்றி இங்கு காண்போம்.




                 சத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வள மையத்தின்  கிராமக் கல்வி குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 07-02-2012 இன்று  இரண்டாம் நாள்.


           மரியாதைக்குரிய வட்டார வள மேற்பார்வையாளர் அவர்கள்சத்தி ஒன்றியம்- பெரியூர் மையத்தில் கல்விக்குழு உறுப்பினர்களின் பங்கேற்பில்  விளக்கவுரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் இடது கோபி சுகாதார ஆய்வாளர் திருமிகு.மணி அவர்கள் மற்றும் வலது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சத்தி மற்றும் தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.

                  
               திருமிகு.சுகாதார ஆய்வாளர் அவர்கள் சுகாதாரம் பற்றி குறிப்பாக பள்ளியில்  ஏழாம் வகுப்புக்கு மேல் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உடலியல் ரீதியாக தோன்றும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் பற்றிய தெளிவுரை கொடுக்க ஆசிரியைகளுக்கான,பெற்றோர்களுக்கான கடமைகள் பற்றி மிகத்தெளிவாக விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.



    திருமிகு.மு.பாலகிருஷ்ணன் M.A.,D.T.Ed., இடைநிலை ஆசிரியர்-ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளி,வேடர்நகர்,புதுவடவள்ளி-சத்தியமங்கலம் அவர்கள் பள்ளிக்குழந்தைகளிடம் சூழலுக்கேற்ப,குழந்தைகளோடு ஒன்றி உறவுக்கு உறவாக,நட்புக்கு நட்பாக பழகி பாடங்களை சுமையில்லாமல் ஆர்வத்தோடு கற்க ஏற்றவாறு கற்பிப்பது பற்றி விளக்கவுரை அதாவது
         ''ஆசிரியர் பணி அறப்பணி!,அதற்கே உன்னை அர்ப்பணி!!''
        என வார்த்தைகளுக்கேற்ப சுமார் இரண்டு மணி நேரம் தொய்வின்றி  கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களிடையே உரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.
       மரியாதைக்குரிய மக்கள் பிரதிநிதி அவர்கள் அரசுப்பள்ளி குழந்தைகள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக குறைபட்டு அதனை நிவர்த்தி செய்ய பொதுமக்களாகிய நமது செயலாற்றல் எவ்வாறு இருக்க வேண்டும்.அரசு மானியங்கள் பள்ளிக்கு சரியானமுறையில் பயன்படுத்தப்படுகிறதா?எனக் கண்காணிப்பது பற்றிய  விழிப்புரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் வார்டு உறுப்பினர் உட்பட மேலும் பல உள்ளூர் பொறுப்பாளர்கள்.
         அரசியலில் நாங்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் கல்வி என்பது பொதுமக்கள் என்ற வகையில் எங்களது குழந்தைகளுக்கும் அவசியம். என பயிற்சியில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள பழைய கலையனூர்  மக்கள் பிரதிநிதி அவர்கள்.அருகில் திருமிகு. ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.
         வருகை புரிந்த கிராமப் பெரியோர்களுக்கு வழிகொடுத்து, பிறகு மீண்டும் தமது தமிழ்ச்சொல்லாடலால் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த சிந்திக்கத்தூண்டும் கதைகளால் அரங்கத்தை கலகலக்க வைத்த திருமிகு.மு.பாலகிருஷ்ணன்.M.A.,D.T.Ed.,  இடைநிலை ஆசிரியர் அவர்கள்.


             மரியாதைக்குரிய ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் அரசு கல்விக்காக செலவிடப்படும் நிதிகள் மற்றும் கட்டுமானங்கள்,அதனைக் கண்காணிப்பது,பாதுகாப்பது என  கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடமைகள் & உரிமைகள் பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

      பெரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணிணியில் சர்வ சாதாரணமாக நுட்பங்களைக் கையாண்ட காட்சி மேலே மற்றும் கீழே உள்ள படங்கள்.



         கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு பரிமாற பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் இவர்களுடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சி மேலே உள்ள படம்.மற்றும் கீழே உள்ள படம்.








          கோபி செட்டிபாளையம் சுகாதார ஆய்வாளர்  திருமிகு.மணி அவர்கள்  கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் சுகாதாரம் பற்றி கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்த காட்சி.மேலே உள்ளபடம்.(அதோடு பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்,என அனைவருக்கும் அவரது கைபேசி எண் கொடுத்த பாங்கு பாராட்டுக்குரியது)



      தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் திருமிகு.பரமேஸ்வரன் அவர்கள் அரசுப்பள்ளி மற்றும் அதில் பணி புரியும் தற்போதைய ஆசிரியர்கள் எவ்விதத்திலும் திறமை குறைந்தவர்களல்லர்!. என ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரின் செயல்,மற்றும் கோவை மாவட்டம்-காரமடை ஊராட்சி ஒன்றியம்-ராமாம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் செயல்பாடு பற்றி ஆதாரத்துடன் விளக்கி இங்கும் பொதுமக்கள் மனது வைத்தால் இங்குள்ள அரசுப்பள்ளிகளையும் சர்வதேச தரமுள்ள பள்ளிகளுக்கு இணையாக மாற்ற முடியும்.என தெளிவுரை நிகழ்த்தினார்.அதற்காக கையாண்ட ஆதாரங்கள் கீழ் கண்டவாறு. ஐந்து ஆதாரங்களை பிற வலைப்பதிவுகளிலிருந்து குறுந்தட்டில் பதிவிட்டுக்கொண்டுவந்து பெரியூர்- முகாமில் திரையிட்டு கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

                  மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயனுள்ள தகவலாக - கணிணியில் தமிழில் தட்டச்சு செய்வது பலமுறைகள் வியாபார ரீதியாகக் கையாள்வதன் சூழ்ச்சியினையும் அவ்வாறு பலவகைகளைக் கையாண்டு மனம் சோர்வடையாமல் எளிதில் பயன்படுத்த முப்பது எழுத்துக்களைக்கொண்டு ஷிப்ட் அழுத்தாமல்  தமிழ்'99 முறையில்  தமிழ் தட்டச்சு செய்வது மிக எளிமையானது என்பதனையும், விசைப்பலகையில் கைவிரல்களை எவ்வாறு பதிந்து எளிமையாக கையாளலாம் என்பது பற்றியும்,தமிழ்'99 க்கான மென்பொருளை http://www.nhmwriter.inவலைத்தளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து அதனை கணிணியில் உள்ளீடு செய்து பயன்படுத்துவது பற்றியும் திரையிட்டு  எளிய விளக்கவுரை நிகழ்த்தினார்.

                                    பதிவேற்றம்;-PARAMESDRIVER-
                                      TAMILNADU SCIENCE FORUM
                                                SATHY & THALAVADY







No comments:

Post a Comment