Sunday, August 19, 2012

Drivers India - ஓட்டுனர்களுக்கான வலைப்பக்கம்

மரியாதைக்குரிய நண்பர்களே,
                      இனிய வணக்கம். 
                ஓட்டுனர்களாகிய நமக்கு தொழில்ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகி அதன் காரணமாக சமூகத்தின் பார்வையிலும் கொடூரமானவர்களாக காணப்பட்டு வருகிறோம். அத்துடன் பிறர் செய்யும் தவறுகளுக்கு ஆள்பலம்,பணபலம்,சட்ட யுக்தி என பல காரணங்களை வைத்து கூலிக்கு வேலை செய்யும் நாம் எளிதாக தண்டிக்கப்பட்டும், கேவலப்பட்டும் வருகிறோம்.சமூகத்தின் அந்த தவறான பார்வையை அகற்றி நாமும் சராசரி மனிதர்களே,சூழ்நிலை நம்மை குற்றவாளியாக்குகிறது. என்பது போன்ற பல பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் செய்து தீர்வு காண நாமும் தெளிவு பெற,ஓட்டுனருக்கென்றே தனி வலைப்பக்கம் driversindia.blogspot.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் ஓட்டுனரே! ஓட்டுனர்கள் அனைவரும் முறைப்படி சங்கம் கட்சிசார்பற்ற முறையில் அமைத்து நமக்காக நமது நன்மைக்காக செயலாற்றுவோம்.பொதுச்சேவையும் நம்மால் இயன்ற அளவு செய்வோம்.சமூகத்திடம் நல்ல உறவு வைத்துக்கொள்வோம். எனவே ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாகி நல்ல விசயங்களை,சமூகத்திடன் பகிர்ந்து நம்மையும் பாதுகாத்து,நம்ம குடும்பத்தையும் பாதுகாத்து ஓட்டுனர் பணி ஒப்பற்ற உயர்வான பணி! கலையும் கூட! என்பதை உணர்வோம். உணரச்செய்வோம்.என 
        PARAMES DRIVER - THALAVADY - ERODE

5 comments:

  1. வணக்கம் சார்...

    பல தகவல்களை உங்கள் தளம் மூலம் அறிய விரும்புகிறேன்...

    உங்கள் தளத்தில் Follower ஆகி விட்டேன்.... சென்னை திருவிழாவில் தங்களிடம் பேச முடியவில்லையே என்று வருந்துகிறேன்...

    தொழிற்களம் குழுமம் "நான் பதிவர்" பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்... எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை சொடுக்கி படிக்கவும்...

    நான் பதிவர் அறிமுகம் : பேருந்து ஓட்டுனர் பரமேஸ்வரன்

    நன்றி.... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)

    (New Interface : Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    தவறாயின் மன்னிக்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. ஓட்டுனர் பணி ஒப்பற்ற உயர்வான பணி! கலையும் கூட! என்பதை உணரச்செய்யும் அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. தங்களது அறிமுகம் தொழில்களத்தில் படித்தேன். மிகச்சிறந்த சமூகப் பணியை செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. இனிய சந்திப்பு
    பதிவர் விழாவில்
    நன்றி

    ReplyDelete