Wednesday, February 11, 2015

ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பொருந்தக்கூடிய நட்சத்திரங்களும்,மாமியாருக்கு கெடுதல் தரும் இடங்களும்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 ஆயில்யம் நட்சத்திரம் பொருந்தக்கூடிய நட்சத்திரங்கள் பற்றி காண்போம்.மற்றும் மாமியாருக்கு கொடுதலா?என்ற தகவலையும் பார்ப்போம்.

ஆயில்ய நட்சத்திரம் (கடக ராசி)

இது புதனின் நட்சத்திரம்.

1. கார்த்திகை
2. மிருகசீரிஷம்
3. புனர்பூசம்
4. பூரம்
5. சித்திரை
6. சுவாதி
7. விசாகம்
8. அனுஷம்
9. திருவோணம்
10. அவிட்டம்
11. சதயம்

ஆகிய 11 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

மூலம், பூராடம், உத்திராடம் (1ஆம் பாதம்) ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு சதய நட்சத்திரம், அவிட்டம் 3 & 4, பூரட்டாதி 1, 2 &3 ஆம் பாதங்களுக்கும் உள்ளது. அவைகள்  கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் சதயமும், அவிட்டம் 3 & 4, மட்டும் பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.

அதே நிலைப்பாடு திருவாதிரை, மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள், புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் மிருகசீரிஷம், புனர்பூசம்  பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

அஸ்விணி, மகம், மூலம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஆயில்யம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது. பொருந்தவே பொருந்தாது!

திருவாதிரை, பூரம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

பரணி, ரோஹிணி, உத்திரம், ஹஸ்தம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 8 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி பொருத்தம் உள்ளவையாகும்! 


 ஒரு பெண்ணுக்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்து 10 ஆம் இடம் அல்லது வீடு என்று சொல்லப்படும் மாமியார் வீட்டில் புதன்+ராகு+செவ்வாய் இருந்தால் அல்லது 4 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் மாமியாருக்கு கெடுதல் உண்டாகும். இருந்தாலும், மாமியார் ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும்,எட்டாம் இடத்திற்குரிய அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும்,குரு உச்சம் பெற்று இருந்தாலும் மாமியாருக்கு எவ்வித கெடுதலும் வராது.ஆகவே நட்சத்திரத்தை மட்டும் பார்த்து திருமணப் பொருத்தம் முடிவு செய்வது சரியில்லைங்க!.

No comments:

Post a Comment