Wednesday, October 21, 2015

தாளவாடி அரசுப்பேருந்து வழித்தடம் மாற்றி?????????




சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு செல்லும் அரசு பஸ்சை திருப்பூர் நோக்கி ஓட்டிய டிரைவர் ஈரோடு மாவட்ட தினத்தந்தி செய்தி

மாற்றம் செய்த நாள்:
புதன், அக்டோபர் 21,2015, 11:08 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், அக்டோபர் 21,2015, 11:08 AM IST




















சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு செல்லும் அரசு பஸ்சை காரில் சென்று எம்.எல்.ஏ. வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு தினமும் மாலை 6.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள தாளவாடி நிறுத்தத்தில் அந்த அரசு பஸ் நேற்று மாலை 6.30 மணிக்கு நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் தாளவாடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட 70 பயணிகள் இருந்தனர்.
அப்போது பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் இந்த பஸ் தாளவாடி செல்லாது. திருப்பூர் செல்கிறது என்று கூறினர். இதை கேட்டதும் பயணிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே அவர்கள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் நோக்கி...
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம், ‘நாளை (அதாவது இன்று) ஆயுத பூஜை நடைபெறுகிறது. இதனால் தாளவாடி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சத்தியமங்கலம் வந்து பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி இந்த பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏறி அமர்ந்து உள்ளனர்.
மேலும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாணவ–மாணவிகளும் இந்த பஸ்சுக்காக காத்திருந்து ஏறி உள்ளனர். இப்படி இருக்கையில் திடீரென்று வந்து தாளவாடிக்கு பஸ் செல்லாது. திருப்பூருக்கு செல்கிறது என்று சொன்னால் எப்படி?. நாங்கள் பஸ்சை விட்டு இறங்கமாட்டோம்,’ என்று தெரிவித்ததுடன் பஸ்சிலேயே இருந்தனர். பயணிகள் யாரும் இறங்காததால் டிரைவர் பஸ்சை எடுத்துக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்றார்.
காரில் வழிமறித்த எம்.எல்.ஏ. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் ‘ஓவென்று’ சத்தம் போட்டு கத்தியதுடன் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இதுகுறித்து பவானிசாகர் பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததும் பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ. தனது காரில் திருப்பூர் நோக்கி சென்று அரசு பஸ்சை முந்தி சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. சந்திப்பு பெட்ரோல் பங்க் அருகில் வழிமறித்து அதன் குறுக்கே தனது காரை நிறுத்தினார்.
உடனே அவர் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தாளவாடி பயணிகளை நீங்கள் எந்த அடிப்படையில் திருப்பூருக்கு கொண்டு செல்லகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீர் பரபரப்பு இதற்கிடையே இதுகுறித்த தகவல் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பஸ் தாளவடிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
பின்னர் அந்த பஸ் ஒரு மணி நேரம் தாமதமாக 7.30 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment