Monday, December 5, 2016

ஜெயலலிதா-சரித்திர நாயகி..

   புத்தகங்கள் தவிர வேறெதையும் ஏறெடுத்துப்பார்க்காத  இரும்பு மங்கை .




மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். ஜெயலலிதா என்னும் சரித்திர நாயகி பற்றி காண்போம்.
              
            2013 ஜனவரி 31 ந் தேதி நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளரும்,தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் கூறியதாவது...  
                சில பெண்கள் இருக்கிறார்கள் , பெரும்பாலான பெண்கள் , இளம் வயதில் தகப்பனை சார்ந்திருப்பார்கள் , பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள் , வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள் , ஆனால் என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள்
நான் யாரையும் சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை . யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமைய வில்லை . எப்போதுமே நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் , எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு , வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன் . இது என்னுடைய தனித் திறமை என்று நான் சொல்ல மாட்டேன் , இது விதி . தலையெழுத்து .



ஜெயலலிதா_ஒரு_இரும்பு_மனுஷி :
  நான் கட்சிகாரனல்ல ... நான் மனப்பூர்வமாக நேசிக்கும் ஒரு மனுசியை பற்றி தெரிந்ததை கூறுகிறேன் ... இதில் ஏளனப்படுத்தவோ, பகிரங்கப் படுத்தவோ ஒன்றும் இல்லை.. அவரே அவரது சொந்த வாழ்க்கை பற்றி பேட்டி தந்திருக்கிறார்.சோபன் பாபு பற்றியும் வெளிப்படையாக பேட்டி தந்திருக்கிறார்.
இதில் தவறேதும் இருக்கிறதா என்ன...எல்லா அரசியல்வாதிகள் போல மறைக்கவோ, புளுகவோ, இல்லையே., இன்று அரசியல்வாதிகள் வாழும் வாழ்க்கைக்கு அது ஒன்றும் அவ்வளவு சாக்கடை அல்ல ...
இதிலிருந்து புலப்படும் உண்மை " அவர் என்றுமே அரசியலுக்கு வரவிரும்பவே இல்லை " என்பதே...
தனக்கான, அமைதியான சந்தோசமான வாழ்வை அடையமுடியாமல் தடுத்த நயவஞ்சகர்கள் இடையே தன் வாழ்வை எப்படியாவது அமைத்துக் கொண்டு புகழ் வெளிச்சத்தில் இருந்து வெளியேறவே ஜெயலலிதா விரும்பினார்... மீண்டும் மீண்டும் அவரின் சொந்த விருப்பை பறித்து சினிமாவிலும், அரசியலிலும் அவர் தள்ளப்பட்டார்.அதனால்தான்  அவர் அரசியலிலாவது தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பி தனக்கான சரித்திரத்தைத்  தானே அமைக்கத் துவங்கினார்.. 
(இவ்வாறாக தன்னையே உருவாக்கிக்கொண்ட இன்னொருவர் ராதிகா) ..
இயல்பாக ஜெயலலிதா குடும்பம், குழந்தை என தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே விரும்பினார். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி அவராக வந்து நுழையவே இல்லை .. மெட்ரிக் தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா .. அவர் படிப்பை நிறுத்தி சினிமாவில் கொண்டு வந்தது அவர் தாயின் பொருளாதார நிர்ப்பந்தம் ..
பல மொழிகளைப் பேசும் வல்லமையும், தீர்க்கமான அறிவும், புத்திசாலித்தனமும் இருந்தும் அவர் நினைத்த வாழ்வை அடைய முடியாது அவரது துரதிர்ஷ்ட்டம்... .
எத்தனையோ முறை சினிமாவில் இருந்து அவர் வெளியேற முயற்சித்ததும், அது முடியாமல் மீண்டும் சினிமாவிலேயே இருக்க வைக்கபட்டார், சினிமாவில் தவிர ஒரு பொழுதும் அவர் யாருக்காகவும் நடித்ததில்லை ... கோபமாகட்டும், ஆவேசமாகட்டும், சூட்டிங் ஸ்பாட்டிலேயே கர்ஜித்து விடுவார்.. எந்த தயாரிப்பாளருக்கும் அவர் ஒரு போதும் கூழை கும்பிடும் போட்டதில்லை .. எந்த ஹீரோவுக்கும் அவர் வாய்ப்புக்காகவேனும் நயைந்து ஒரு சிரிப்பும் சிரித்ததில்லை .... எப்பேற்பட்டவரையும் "ஷட் அப் " என்று சொல்லி விட்டு போய்க்கொண்டே இருப்பார்.. படப்பிடிப்பில் தன் நடிப்பு நேரம் முடிந்ததும் புத்தகங்கள் தவிர ஏறெடுத்தும் யாரையும் கவனிக்கக்கூட மாட்டார்! என்று பலரும் கூறி கேள்விப்பட்டதுண்டு ...
அவரின் ஆசைகளோ, காதலோ, அமைதியான வாழ்வோ எல்லாமே அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன, தனிமையாக்கப் பட்டார்.. தாயும் இறந்தபின் யாருமில்லாத தனிமரமானார் .. அதற்கு பின்புதான் வேறு வழியில்லாமல், போக்கிடமில்லாமல் அரசியலி நுழைந்தார் .. சீண்டினால் பாயும் புலி என்பது அறியாமல் சீண்டியதன் விளைவே அவரின் அரசியல் அத்தியாயம்! என்பது யாவரும் அறிந்த ஒன்று ..
அவரை படுகுழியில் தள்ளியவர்கள் முன்பு பிரமாண்டமாக எழுந்து நின்றார்... அந்த கோபமே இன்றும் அடங்காமல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது.. நடிகை என்று எள்ளி நகையாடியவர்கள் முன்பு "நடிகை" என்ற அடையாளத்தையே துடைத்து எறிந்து "ஜெயலலிதா" என்று துணிச்சலாக நின்று காட்டினார்.. எப்பேர்ப்பட்ட சாதனை ....
அவரை கேவலப்படுத்திய அதே சமுதாயத்தை தலை நிமிர்ந்து பார்க்கவைத்தார், எட்டி உதைத்து துகிலுரிந்த அதே ஆண் வர்க்கத்தை "அம்மா" என்று வணங்க வைத்தார், அதே ஆண்கள் இவரை வணங்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் கடந்த கால காயங்களுக்கு மருந்தாகவே அவர் நினைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன் ... தான் துடைத்து எறிந்த காயங்களுக்கு சான்றாகவே நினைத்திருப்பார் என்றே நான் நினைப்பேன் ..
சாதிக்க இயலாது என்று நினைத்த ஒவ்வொன்றிலும் அவர் சாதித்தே காட்டினார்..  அவர் டெல்லி செல்லும்போது  திரளும் பத்திரிக்கையாளர் கூட்டமும், கோட்டை அடையும் பரபரப்பும் இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு மரியாதை.. யாரும் மிரளும் தன்மை கொண்டவராக நம் முதல்வர் இருந்ததில் பெருமையே... இதை ஜால்ரா எடுத்து கொண்டாலும்,எனக்கு கவலை இல்லை.. நான் பேசுவது ஒரு தனிப்பட்ட மனுசியை ..
நான் இன்று வரை ஜெயலலிதா அவர்களை அன்றும் - இன்றும் என்று மட்டுமே பிரித்து காண்கிறேன்.. அன்றைய ஜெயலிதாவின் இன்னல்கள் ஒரு ஆணுக்கு இருந்திருந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டு காணாமல் போயிருப்பான் என்பது மட்டும் நிச்சயம்.. தற்போது புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் செயல்பாடுகள் விவாதத்திற்கு உலாவுவது உண்டு... ஏன் என்றால் அன்று என்பது வரலாறு... இன்று என்பது வேற்று பேச்சு.. அவ்வளவுதான் ... இந்த வேற்றுபேச்சில் எத்தனை வரலாறு உருவாக போகிறது, என்பது திறமையின் சான்று... அதை ஜெயலலிதா நிருபித்து கொண்டே இருந்தார் ..

இந்த உலகில் யாருக்கு எந்த பட்டம் பொருத்தமோ இல்லையோ ஜெயலலிதாவிற்கு மிக பொருத்தம் "புரட்சி தலைவி " என்ற பட்டம் தங்கள் வாழ்வில் ஒருபோதும் யாரும் விரும்பியே தவறுவதில்லை.. நயவஞ்சக நரிகளை தவிர... அவ்வாறான கருத்து நோக்கத்தில் பார்க்கும்போது ஜெயலலிதா ஒரு பெண் புலியே!,இரும்பு மனுஷியே!! 
என அன்பன்,
செ.பரமேஸ்வரன், 9585600733
செயலாளர்,
விதைகள் வாசகர் வட்டம்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
 சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.

1 comment:

  1. எனக்கு ஜாதக ரீதியாக ஒரு சில விளக்கம் தேவை ! உதவி செய்ய முடியுமா ! தங்களின்
    தொடர்பு ( போன் அல்லது மெயில் ) கொடுக்கவும் ! LGS0563@GMAIL.COM

    ReplyDelete